Happy தன்ங்lish புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே,

Happy தன்ங்lish புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 * மல்யுத்தம், குஷ்டி, சிலம்பம் மறந்த நாம், Cricket play செய்து நாட்டை காப்போமாக .
 * தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மறந்த நாம், வெகு விரைவில் திருக்குறளையும் மறப்போமாக.
 * சிறுதானியங்கள் மறந்த நாம், KFC, McD la Pizza, Fried Chicken Meals சாப்பிட்டு, 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வோமாக.
 * 1800 வருடத்துக்கு முன் கல்லணை கட்டும் தொழில்நுட்பம் உடைய நாம், இன்று தொழில்நுட்ப புரட்சியில் தோற்று Services / Support எனும் சோம்பு தூக்கும் வேலை செய்கிறோம் என்பதை மறைத்து, Software Engineer / Techie என்று மாரு தட்டி கொள்வோமாக.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி தெரியாத என் இனிய தமிழ் மக்களுக்கு மறுபடியும், என் மனமார்ந்த தன்ங்lish புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நமக்கு மொழியும், கலாச்சாரமும் முக்கியம் (வருடத்திற்கு 2-3 முறை)!

PS: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால், வள்ளுவனையும், பாரதியையும் போய் திட்டுங்கள், தவறான தமிழ் பேசியதற்காக. Because the தமிழ், that we speak now eh, சரியான தமிழ் Language. Am I right, Dear proud தமிழns?

(Approx.) English Translation with necessary explanation:

Warning: It's just a pointless rant, looking at the Hypocrisy all around!

Hi Friends,

Happy Tanglish New year,

  1. We forgot Mud Wrestling, Kushti, Silambam (Sports of Tamil culture), but let's play Cricket to save the Nation.
  2. We forgot Tholkappiyam, Silapathigaram (forgotten Tamil literature), let's also quickly forget Tirukkural (a world famous Tamil literature, still learned and remembered by people).
  3. We forgot healthy Millets (food of ancient civilizations, not just Tamils), Let's have Pizza, Fried Chicken means from KFC, McD and long live for 100 years.
  4. We had technology to build Kallanai Dam 1800 years back. Today we lost the Technology revolution and doing the dumb IT Support / Services. But let's hide it and brag that we are Software Engineers / Techies!
To those proud Tamil people, who even don't know the Tamil months (Sithirai, Vaikasi, Aani, Aadi,...), my heart whole Tanglish new year again.

For us, Language and Culture are important (2-3 times in a year atleast)!

PS: If this message has hurt anyone, blame Valluvam, Bharathi (Famous Tamil Scholar/Poet) for they spoke wrong Tamil. Because the Tamil, that we speak NOW is the right Tamil Language. Am I right, Dear proud Tamilans?



தோழர் சக்தியின் நெஞ்சை தொட்ட தமிழ் புத்தாண்டு பதிவு:
வேர்க்காத மேகம்
வேர் காய்ந்த பயிர்கள்
பார்க்காத பதவிக்காரன்
பசியோடு விவசாயி!
சிரிப்பு எப்படிவரும்
சித்திரை பிறந்ததென
வெல்லட்டும் விதைத்தவர்
தவிர்கிறேன் தமிழ்புத்தாண்டை
தமிழனுக்காக!
~ சக்தி ராகவா ~

Comments